OLD AGE SOLUTIONS

Portal on Technology Initiative for Disabled and Elderly
An Initiative of Ministry of Science & Technology (Govt. of India)
Brought to you by All India Institute of Medical Sciences

உடல் நலம்


உடல் நலம் மற்றும் உடல் திறன



ஆரோக்கியமான உணவு



ஆரோக்கியமான எலும்புகள்



நல்ல உறக்கம்



உங்கள் பற்குழி பாராமரிப்பு



முதிய வயதில் தெளிவான பார்வை



நோய்எதிர்ப்பு சக்தி



நல்ல கேட்கும் திறன்



மருந்துகளை நிர்வகித்தல்



பாத பராமரிப்பு



தவறி விழுதல் & விபத்து



மலசிக்கல்

சிறுநீரை அடக்க இயலாமை

உயர் ரத்த அழுத்தம்

இதய நோய்

சர்க்கரை நோய்

பிராஸ்டேட் பிரச்னைகள்

சிதைகின்ற திரட்டு

ஸ்டிரோக்

கேன்சர்

மனநலம்


ஊட்டச் சத்து


புராஸ்டேட் பிரச்னைகள்

அக்ரூட் பருப்பு போல சிறிய வடிவிலான சுரப்பிதான் புராஸ்டேட் எனப்படுகிறது. ஆண்களின் சிறுநீர்ப் பைக்குக் கீழே மற்றும் சிறுநீர் பாதையைச் சுற்றி இருக்கிறது. (இந்த குழாய் வழியேதான் உடலில் இருந்து சிறுநீர் வெளியேறுகிறது). ஆண்களின் இனப் பெருக்கத்தில் இது முக்கியப் பங்காற்றுகிறது.

50 வயதுக்குப்பின் பிராஸ்டேட் பிரச்னை என்பது பொதுவான பிரச்னையாக இருக்கிறது ஆண்களின் பாலியல் ஹார்மோன் செயல்பாடு காரணமாக புராஸ்டேட் விரிவடைகிறது.. புராஸ்டேட் விரிவாதல் பெரும்பாலானவர்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படுவதில்லை. எனினும் இந்த விரிவு சில நோயாளிகளுக்கு இதனால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.


பாதிப்பு ஏற்படுத்தாத புராஸ்டேட் வீக்கம் (BPH)

பாதிப்பு ஏற்படுத்தாத புராஸ்டேட் வீக்கம், பெரிய சுரப்பி சிறுநீர் குழாய் மேல் அழுத்தி சிறுநீர் வெளியேறுவதைத் தடுக்கலாம். இரவு நேரங்களில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் கழித்த பின் திருப்தி இன்மை, ஒழுகுதல் மற்றும் இறுதியாக முழுவதுமாக சிறுநீர் வெளியேறுதல் ஆகியவை முக்கிய அறிகுறிகள். புராஸ்டேட் வீக்கம் என்பது சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்படலாம் என்பதற்கான முன் அறிகுறியாகும். புராஸ்டேட் பெருக்கத்தை டிஜிட்டல் முறையில் மலக்குடல் சிரை பரிசோதனை செய்து ஆரம்ப கட்டத்திலேயே தெரிந்துகொள்ளலாம். மேலும் அல்ட்ராசவுண்ட்கிராபிக் மூலம் புராஸ்டேட் வீக்கத்தை உறுதி செய்யலாம் மற்றும் சிறுநீர் கழித்தபின்னர் சிறுநீர் பையில் இருந்து எவ்வளவு வெளியேறாமல் உள்ளது என்பதையும் அளவிடமுடியும்.

சிறிய புராஸ்டேட் வீக்கம் பிராசோசின், டெரா சோசின் மற்றும் டாக்சாசோசின் போன்ற மருந்துகளுடன் கூடிய சிகிச்சையின் மூலம் குணப்படுத்த முடியும். எனினும் மருந்து சிகிச்சையின் மூலம் இதைக் குணப்படுத்த முடியாது. பெரிய புராஸ்டேட் பெருக்க அறிகுறியானது மருந்து சிகிச்சைக்கு ஒத்துழைக்காது. அறுவை சிகிச்சையின் மூலமே புராஸ்டேட் பெருக்கத்தை வெட்டிக் குறைக்க முடியும். புராஸ்டேட் வீக்கத்தை தற்போது சிறுநீர் வடிகுழாய் வழியே அகற்றமுடியும். (சிறுநீர் வடிகுழாய் பாதை வழியில் புராஸ்டேட் பெருக்கத்தை வெட்டி அகற்றுதல் (TURP) ). அடிவயிறு அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவது ஏறக்குறைய வழக்கொழிந்துவிட்டது.


புராஸ்டேட் புற்று நோய்

65வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு புராஸ்டேட் புற்று நோய் ஏற்படுவது பொதுவானதாக இருக்கிறது.
புற்று நோயால் ஏற்படும் வலுவின்மை அறிகுறிகளே BPH ஏற்படுவதற்கான அறிகுறியாகும். சிகிச்சையளிக்கப்படாத கேன்சர் உடலின் எல்லாப் பாகங்களிலும் பரவி வலியை, சுகமின்மையை அதிகரிக்கும். மற்றும் இறுதியில் மரணத்தை ஏற்படுத்தும். மலக்குடல் சிரை சோதனை மூலம் முறையாக பரிசோதித்து புராஸ்டேட் புற்று நோயை முன்கூட்டியே கண்டுபிடிக்கலாம். அறிகுறிகள் தோன்றும் முன்பு இதைக் குணப்படுத்த முடியும்.

புராஸ்டேட் புற்று நோய் இருப்பது தீர்மானமாகத் தெரிந்தபின் உடல் திசு ஆய்வு அவசியப்படுகிறது. (மைக்ரோஸ்கோப் பரிசோதனையில் ஒரு ஊசியின் மூலம் எளிய அறுவை சிகிச்சை முறையில் சிறிய அளவிலான புராஸ்டேட் திசு நீக்கப்படுகிறது.) இந்த அறுவை சிகிச்சையின் போது சாதகமான முடிவு ஏற்படும் பட்சத்தில் புராஸ்டேட் புற்று நோய் மேலும் பரவியிருக்கிறதா? என்பது குறித்த மேலும் தீர்மானமான ஆய்வு தேவைப்படுகிறது.

புராஸ்டேட் புற்று நோக்கான அறுவை சிகிச்சை, ஹார்மோன் சிகிச்சை, ஒளிக்கதிர் சிகிச்சை ஆகிய பல்வேறு சிகிச்சை முறைகள் இருக்கின்றன. நோயின் தன்மையைச் சார்ந்துதான் அறுவை சிகிச்சையின் முடிவு இருக்கிறது.

மலக்குடல் சிரை உள்ளிட்ட முறையான மருத்துவப் பரிசோதனைகள் புராஸ்டேட் பிரச்சினைக்கு எதிரான நல்ல பாதுகாப்பாகும். சிறுநீர் முந்துதல், சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் உங்கள் மருத்துவரை அணுகவும். தீவிரமான அறிகுறி வரும் வரை காத்திருந்தால் விளைவுகளும் மோசமானதாக இருக்கலாம். மற்றும் சில சமயம் உயிருக்கு அச்சுறுத்தலான பிரச்னையாக மாறிவிடலாம்.

  Copyright 2015-AIIMS. All Rights reserved Visitor No. - Website Hit Counter Powered by VMC Management Consulting Pvt. Ltd.