|
|
Resize Text - அன்னபூர்ணா திட்டம்இத்திட்டத்தை மத்திய அரசின் கிராமப்புற வளர்ச்சி அமைச்சகம் 2000-2001ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. 65 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற முதியோர் அல்லது தேசிய சமூக உதவித் திட்டத்தின் கீழ் (என்.எஸ்.ஏ.பி.) முதியோர் உதவித்தொகை பெறத் தகுதியானார்கள் அனைவரும் இத்திட்டத்தில் கவரப்படுவர். இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதமும் 10 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும். தேசிய சமூக உதவித் திட்டத்தின் கீழ் வரும் தேசிய சமூக உதவித் திட்டம் மற்றும் தேசிய குடும்ப இலாபத் திட்டம் ஆகியவற்றுடன் சேர்த்து இத்திட்டமும் 2002-2003 முதல் மாநில அரசுகளின் பொறுப்பில் ஒப்படைக்கப் பட்டுவிட்டது. மாற்றப்பட்ட இத்திட்டங்களுக்கான நிதி உதவி நிதி அமைச்சகத்தால் கூடுதல் மத்திய உதவியாக (ஏ.ஸி.ஏ.) மாநில அரசுகளுக்கு வழங்கப்படுகிறது. திட்டத்தால் பயன் பெறுபவர்களைத் தேர்ந்தெடுக்க மாநில அரசுகளுக்குத் தேவையான அளவு முழுச்சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது., வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ளவர்களுக்கு வழங்கப்படும் விலையில் தற்போதைய நிபந்தனைகளின் கீழ் இவ்வுணவு தானியங்கள் மாநில அரசுகளுக்குத் தரப்படுகின்றன. (காண்க: http://fcamin.nic.in/) |