|
|
|||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||
அப்படியே நுழைத்துக்கொள்ளும் டிரஸ்ஸிங் கருவி |
|
| யாருடைய உதவியும் இல்லாமல் காலுறைகள், ஸ்டாகிங்குகள், ஸ்லாக்குகள், அரைக் கால் சட்டை, பைஜாமா, ஜட்டிகள் மற்றும் பிற உள்ளாடைகளை முதியோர் மற்றும் குனிவதில் பிரச்சினை உள்ளவர்கள் அணிந்து கொள்ள உதவும். காலணிகள் மற்றும் காலுறைகளை ஒரு கையிலோ இரண்டு கைகளாலோ அகற்ற உதவுகிறது. கீழ் முனையில் இருக்கும் V வடிவில் இருக்கும் அமைப்பு காலணிகள் மற்றும் காலுறைகளை அகற்ற உதவுகிறது. சிறிது வளைவான பிளாஸ்டிக் கம்பிகள் ஒன்றுக்கொன்று எதிரும் புதிருமாக இருக்கும். ஒவ்வொன்றும் 19 இன்ச் நீளம் உடைய கம்பியில் உடையின் ஒரு பகுதியைப் பிடிக்க ஏதுவாக ஒரு முனையில் கொக்கி-லூப் மூடிய பாட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கம்பிகளின் மற்ற முனைகளை ஒருசேர இழுத்தால், கால்களை நுழைக்க வசதியாக உடை திறந்து கொள்ளும் |
|
காலை காலணிக்குள் நுழைக்க உதவும் T வடிவ கைப்பிடி |
|
| தனித்தன்மை வாய்ந்த இந்த T வடிவ கைப்பிடி மணிக்கட்டை மேலே கீழே ஏற்றி இறக்காமல் அதே நிலையில் வைத்துக்கொண்டே காலணிகளை அணிய உதவுகிறது. இவை மூட்டு வலி, இயக்கம் குறைபாடுள்ள, அல்லது வேறு ஏதாவது கை சம்பந்தமான பிரச்சினைகள் உடைய மூத்தோருக்கு மிகவும் பொருத்தமானது. 19.5 இன்ச் நீளமுள்ள இவை குனிவதில் பிரச்சினை உள்ளவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். |
|
நீளமான, காலை காலணிக்குள் நுழைக்க உதவும் கருவி & டிரஸ்ஸிங் கருவிகள் |
|
| 30 அங்குல நீளம் கொண்ட காலை காலணிக்குள் நுழைக்க உதவும் கருவி. இதில் ஒரே கருவியில் இரண்டு டிரஸ்ஸிங் சாதனங்கள் உள்ளன. மேல் கை குறைபாடு கொண்ட மற்றும் தோள்களில் இயக்கம் பாதிக்கப்பட்ட முதியோர்களுக்கு இது மிகவும் பயனுள்ளது. சட்டைகள், ஸ்வெட்டர்கள், கோட்கள், பேன்டுகள், மற்றும் பாவாடைகள் அணிய உதவும். இதன் மேல் பாகத்தை மூடி இருக்கும் மென்மையான சிலிக்கான் இழு –கொக்கி துணிகளில் ஓட்டை ஏற்படுத்தாமல் ,நழுவாத பாதுகாப்புடன் துணிகளைப் பற்ற உதவும். மேல் பக்கம் நழுவாத, தள்ளு-இழு, S வடிவ கொக்கி, தோலில் கீறலோ, வெட்டோ ஏற்படாமல் காலுறைகளை அணியவும், கழற்றவும் உதவும் சாதனம். உடலை அதிகம் சிரமப்படுத்தாமல், குனியாமல் இது துணி அலமாரியை சுலபமாக அடைகிறது. அலமாரி கம்பிகளில் தொங்கிக் கொண்டிருக்கும் துணிகளை எடுக்க தள்ளு-கொக்கியை பயன்படுத்தவும். தரையில் கிடக்கும் டவலை எடுக்க அல்லது அலமாரியிலிருந்து காலணிகளை குனியாமல் எடுக்க இழு-கொக்கி களைப் பயன்படுத்தவும். |
|
காலுறை & ஸ்டாக்கிங்ஸ் அணிய உதவும் டீலக்ஸ் ஃப்ளெக்ஸிபிள் சாதனம் |
|
| மூன்று விரல் வடிவமைப்பு கொண்ட தனித்தன்மை வாய்ந்த இவை ஸ்டாக்கிங்ஸை சுலபமாகப் பிடித்துக்கொள்கிறது.18-மிமி/100 கி. வரையுள்ள பொதுவாக அணியப்படும் ஜட்டிகள் & கம்ப்ரெஷன் ஸ்டாக்கிங்குகள் ஆகியவற்றுக்கும் இவற்றைப் பயன்படுத்தலாம். கைகள் இயக்கக் குறைபாடு, முதுகு வலி பிரச்சினைகள், சக்கர நாற்காலி உபயோகிப்பவர்கள் அல்லது இடுப்பு அல்லது முழங்கால் அறுவை சிகிச்சையிலிருந்து குணமடைந்து வருபவர்கள் ஆகியவர்களுக்கு இரண்டு நீளமான லூப் கொண்ட கைப்பிடிகள் மிகவும் பொருத்தமானவை. பிளாஸ்டிக்கின் மையப்பகுதி, அதிர்வைக் குறைப்பதற்காக நீல நிற நைலான் கொண்டு மூடப்பட்டிருக்கும். காலுறை நழுவாமல் இருக்க வெளிப்பக்கம் டெர்ரி துணியால் மூடப் பட்டிருக்கும். |
|
இரட்டை இஇஸட்ஒய் காலுறை உதவி கருவி |
|
| பொதுவாக அணியப்படும் ஜட்டிகள் & கம்ப்ரெஷன் ஸ்டாக்கிங்குகள் & பாந்திஹோஸ் அணியவும் இது பயன்படும். காலுறைகள், கம்ப்ரெஷன் அல்லது சாதாரண ஸ்டாக்கிங்குகள், பாந்திஹோஸ் அல்லது நீ-ஹைகள் ஆகியவற்றை மிகக் குறைவாக குனிந்து அல்லது ஒரே சமயத்தில் இரண்டு கால்களையும் நீட்ட வேண்டிய அவசியம் இல்லாமல் அணிந்து கொள்ள முடியும். இந்த உறுதியான உதவும் கருவிகள் வழவழப்பான பிளாஸ்டிக் கோட்டிங்குடன் ஸ்டிலினால் செய்யப்பட்டவை. காலுறைகள் அல்லது ஸ்டாக்கிங்குகள் நீட்டப்பட்டு,தொடர்ச்சியாக காலம்களில் & கால்களில் அணியப்படுகிறது. |
|
கைத்தடி ஹோல்டர், கைத்தடி பட்லர் இவை உங்களுடைய கைத்தடியை கண்மறைவாகவும் அதே சமயத்தில் கை எட்டும் தூரத்திலும் வைக்க உதவுகின்றன. |
|
| தானாக ஒட்டிக்கொள்ளும் டேப்பில் இணைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பகுதியை உரித்து ஊன்றுகோலை வழக்கமாக வைக்கக் கூடிய இடத்தில் அழுத்திவிட வேண்டிது தான். எப்போதுமே அதைப் பயன்படுத்தத் தயாராக வைத்திருக்க வேண்டும். அதே சமயத்தில் வழியில் எங்காவது வைத்து, நீங்களோ அல்லது வேறு யாரோ தடுக்கி விழுந்துவிடக்கூடாது. | |